கே ஜி எஃப் புகழ் யாஷின் அடுத்த பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

திங்கள், 9 ஜனவரி 2023 (08:52 IST)
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ்.

இன்னும் அவரின் அடுத்த படத்தினை அறிவிக்கவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் அவ்வப்போது அவரிடம் அப்டேட் கேட்டு அன்பு தொல்லை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று யாஷின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் யாஷின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவின் KVN PRODUCTIONS நிறுவனத்துக்காக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்