சமூகவலைதளங்களில் சாதனை … மைல்ஸ்டோனை எட்டிய யாஷ்

Webdunia
சனி, 21 மே 2022 (16:08 IST)
நடிகர் யாஷ் கேஜிஎஃப் படங்களுக்கு பிறகு மிகப்பெரிய ஸ்டாராக இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ்.

இதையடுத்து அவரை சமூகவலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவர் 10 மில்லியன் பேரால் பின் தொடரப்படுகிறார். எந்தவொரு கன்னட நடிகரும் இதுவரை படைக்காத சாதனையாக இது அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்