‘உனக்க்கு ஓகே ஆகுற வர எடு’… லோகேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்த கமல்!

Webdunia
சனி, 21 மே 2022 (15:54 IST)
கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.  மலையாள உரிமையை சிபு தமீம்ஸ் கைப்பற்றியுள்ளார்.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மற்றும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் படப்பிடிப்பின் போது கமல் சாருடன் பழகிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அதில் கமலிடம் ஒன்மோர் காட்சிகள் கேட்டது பற்றி பேசிய அவர் “முதலில் தயங்கி தயங்கி அவரிடம் கேட்டேன். ஒன்மோர்லாம் கேக்கலாமா சார்” என்று. அதற்கு அவர் நல்ல வரணும்ல.. உனக்கு ஓகே ஆகுற வர கேளு” எனக் கூறியதாக பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்