தமிழக அரசு முத்திரைச் சின்னமாகவும் 108 வைணவ தலங்களில் மிக முக்கியத் தலமாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஆண்டாள் கோவில், சக்கரத்தாழ்வார் சன்னதி, கோபுரவாசல் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக செயல் அலுவலர் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெரு பகுதியில் வசித்து வரும் ஆண்டாள் கோவில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் கர்ணன் என்பவரை செயல் அலுவலர், ஒரு சில அதிகாரிகள் கடுமையான பணிச்சுமை தருவதாகவும் இதனால் ஏற்கனவே உடல் குறைபாடுள்ள தனக்கு மிகுந்த மன உளச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் , உடல் ரீதியான பிரச்சனைகள் செயல் அலுவலரிடம் தெரிவித்தும் வேண்டுமென்றே இரவு பணி வழங்கப்படுவதாகவும் இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் அதிகாரிகள் பணியாட்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும் பெரும்பாலான பணியாளர்கள் அதிகாரிகளுக்கு பயந்துகண்டு வெளியில் சொல்லாமல் உள்ளதாகவும் , நாள்தோறும் இதே நிலை நீடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர் .