திரைக்கதை இல்லாமல் ஷூட்டிங் சென்றதே தோல்விக்குக் காரணம்… ஏஜண்ட் படத்தின் தயாரிப்பாளர் கருத்து!

Webdunia
வியாழன், 4 மே 2023 (08:16 IST)
நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் இப்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகும் புதிய படமான ஏஜெண்ட்டை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். அந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க மோகன் லால் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மறுத்துவிடவே இப்போது மம்மூட்டியுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இப்போது மம்முட்டி நடித்தார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. ஆனால் ரிலீஸுக்கு பின் வசூலில் மரண அடி வாங்கியுள்ளது. இதுவரை வெளியாகி நான்கு நாட்களில் 10 கோடி ரூபாய் அளவுக்குதான் படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய அடியாக அமையும் என சொல்லப்படுகிறது.

இந்த தோல்வி பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் அனில் சுன்காரா “திரைக்கதையை முழுமையாக்காமல் ஷூட்டிங் சென்றதே தோல்விக்குக் காரணம். எந்த சாக்குபோக்கையும் சொல்ல விரும்பவில்லை.  இந்த காஸ்ட்லியான தவறில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து படம் பார்க்க வந்த அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்