67 ஆவது தேசிய விருதுகள் திரைப்பட கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்குழுவில் இருந்த கங்கை அமரன் இரண்டு நடிகர்களுக்கு விருது அளிக்கப்பட்டது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.
2019ஆண்டிற்கான 67 ஆவது தேசிய விருதுகள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படத்திற்கான தேசிய விருதுஅசுரன் படத்திற்கும் இதில் நடித்த தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அதே போல சிறந்த இசையமைப்பாளர்(பாடல்கள்) பட்டியலில் விஸ்வாசம் படத்துக்காக இமானுக்கு விருதுகள் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு மட்டும் இல்லாமல் போன்ஸ்லே என்ற படத்தில் நடித்ததற்காக மனோஜ் பாஜ்பாய்க்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான கங்கை அமரன் நிறைய போட்டி இருந்ததால் இரண்டு நடிகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மனோஜ் பாஜ்பாயும் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கும் விருது வழங்கலாம் என விருதுக்குழு தலைவர் கூறினார் என கூறியுள்ளார்.