கடைசில யாரு ஜெயிச்சது பேட்டையா..? விஸ்வாசமா..?

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (15:28 IST)
தலையா..? தலைவரா...?  என கங்கணம் கட்டிக்கொண்டு வேட்டியை மடித்து கட்டி போட்டியில் களமிறங்கிய "பேட்ட - விஸ்வாசம்" படங்களில் எது முந்திக்கொண்டு முன்னுக்கு சென்றது என்று சற்று அலசி ஆராய்ந்து பார்த்தோமானால்,  அஜித்தின் விஸ்வாசத்தை பின்னுக்கு தள்ளி ரஜினியின்  "பேட்ட" முதலிடத்தை தக்கவைத்துள்ளதாக அவரவரின் தலையாய ரசிகர்களே தெரிவித்துவிட்டனர். 


 
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னர்களான ரஜினி,  அஜித் என பொங்கல் விருந்தின் டபுள் தமக்காவாக இன்று களத்தில் குதித்துள்ள ரஜினியின் "பேட்ட " படமும் அஜித்தின் "விஸ்வாசம்" படமும் ஆரம்பத்தில் இருந்தே அடிதடி எதுவும் இன்றி அகிம்சை போர்வழியில் போட்டி போட்டுவந்தனர். அந்த வகையில் பர்ஸ்ட் லுக் , டீசர் , ட்ரைலர் என படத்தில் சம்மந்தப்பட்ட அத்தனை அப்டேட்டுக்களையும்  ஒருவர் மாற்றி ஒருவர் தொடர்ச்சியாக கொடுத்துவந்தனர். 
 
அஜித் - ரஜினி காம்போ 
 
தமிழ் சினிமாவின் வரலாற்றிலே அஜித் - விஜய் காம்போ தான் காலம் காலமாக இருந்துவந்தது. அதே போல்  ரஜினி என்று சொல்லிமுடிப்பதற்குள் அந்த சொல்லின் முடிவில் கமல் வந்து நின்று விடுவார்.  ஆனால் இந்த பொங்கல் அந்த வரலாற்றையே மாற்றி எழுதி "அஜித் - ரஜினி" "பேட்ட - விஸ்வாசம்"  என்ற மாபெரும் பிரமிக்கதக்க ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது தான்  இந்த இரு படங்களின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு காரணம் . 
 
போட்டியிட்ட ரஜினி அஜித்:
 
ரஜினிக்கும் அஜித்திற்கும்  இடையே ஒளிந்திருந்த இந்த போட்டி கொஞ்சம் கொஞ்சமாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க  அதனை நம்மில் பலராலும் இந்த இப்படங்களின் ட்ரைலரில் சுதாரித்துக்கொள்ளமுடிந்தது. ஏனென்றல் பேட்ட - விஸ்வாசம் என இரண்டு டிரைலரும்  ஒன்றை ஒன்று குறி வைத்து தாக்கியது. 


 
அதற்கு பெரும் உதாரணம் இரு ட்ரைலரிலும்  இடம்பெற்றிருந்த வசனங்கள் தான் 
 
பேட்ட:-   அடிச்சு அண்டர்வாரரோட ஓடவிட்ருவேன் மானம் போன திரும்ப வராது பார்த்துக்க
 
விஸ்வாசம் :- அடேங்கப்பா...!
 
பேட்ட : -     ஏய்..! எவனுக்காவது பொண்டாட்டி ..கொழந்த.. குட்டி ..செண்டிமெண்ட் இருந்தா அப்டியே  ஓடிப்போய்டு  கொல காண்டுல இருக்கேன் மவனே கொள்ளாம விடமாட்டேன்..!
 
விஸ்வாசம் :  பேர் தூக்குதுரை ,  தேனி மாவட்டம் ஊர் கோடுவுளார்ப்பட்டி பொண்டாட்டி பேர் நிரஞ்சனா பொண்ணு பெரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்தை வாடா 


 
இப்படி இருவரும் மாறி மாறி  போட்டி போட்டுக்கொண்டாலும் கடைசியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் "பேட்ட" படம் தான் மாஸ் என்கிறார் நெட்டிசன்கள். ஏனென்றால் பேட்ட படத்தில் விஜய் சேதுபதி , நவாஸுதீன் சித்திக் , சசிகுமார் என கோடிக்கணக்கில் ரசிகர் ஆதரவை பின்பலமாக வைத்துள்ள மிகப்பெரிய நட்சித்திரங்கள் ஒன்று கூடி நடித்தது இதன் வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் இதனை ஆராய்ந்த ரசிகர்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்