ரஜினி எந்த பேட்டைக்கு போனாலும் விஸ்வாசம் வேணும்: நெத்தியடி டாக்

வியாழன், 10 ஜனவரி 2019 (13:30 IST)
பொங்கலை முன்னிட்டு பேட்ட விஸ்வாசம் என இரு பெரிய ஸ்டார்களின் படங்கலும் ரிலீஸ் ஆகியுள்ளது. டைட்டிலை பார்த்ததும் ரசிகர் எவரோ இப்படி சொல்லி இருக்க கூடும் என நினைத்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு இவ்வாரு பேசியுள்ளார். 
 
ஆம், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை அப்சரா இவ்வாறு பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு, அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக என்னை ராகுல்காந்தி நியமித்துள்ளார். இது திருநங்கைகளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்.
 
ராகுல் காந்தி பிரதமரானால் நிச்சயமாக பெண்களுக்காகவும் திருநங்கைகளின் நலன்களுக்காகவும் பாடுபடுவார். காங்கிரசில் பெண்களுக்கு 50% முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மோடி ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பாஜக ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைக்கிறது. இதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 
ரஜினி எந்த பேட்டைக்கு போனாலும், மக்களின் விஸ்வாசம் இல்லாமல் ஒரு ஓட்டை கூட பெற முடியாது என அதிரடியாக பேசியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்