பிரபாஸை இயக்குகிறாரா அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி?

vinoth

திங்கள், 7 ஜூலை 2025 (08:19 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த வெற்றி ராஜ்குமார் பெரியசாமியைக் கவனிக்க வைக்கும் இயக்குனராக்கியுள்ளது.

இதையடுத்து அவர் தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மதுரை அன்பு செல்வன் தயாரிக்கவுள்ளார். படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் எனவும், மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் நடிகர் பிரபாஸை சந்தித்து அவருக்கு இராணுவ பின்னணியில் ஒரு கதை சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்குமார் சொன்ன கதை பிரபாஸுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்