தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வாமிகா கபி..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (13:04 IST)
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி என்ற திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய் வேடத்தில்  வருண் தவான் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை அட்லியின் இணை இயக்குனர்களில் ஒருவரான காளீஸ் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அட்லி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருப்பதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை வாமிகா கபி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெறி படத்தில் ஏமி ஜாக்சன் நடித்த வேடத்தில் வாமிகா கபி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்