''நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி''- இயக்குனர் மாரி செல்வராஜ் டுவீட்

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (13:02 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் உதயநிதி, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாமன்னன்.

இப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று  ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இந்தியாவில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா கலைஞர்கள், விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட பலரும் கருத்துகள் கூறினர்.

இன்று பகத்பாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் அவருக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’வணக்கம் பகத் சார்!!!

உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்..

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்