விரைவில் திருமணம் செய்ய உள்ள விஷால்…. அந்த நடிகை யார் தெரியுமா?

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (16:46 IST)
விஷால் விரைவில் பிரபல நடிகை அபிநயாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். சமீபகாலமாக அவரின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையில் விஷால் சில உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனால் அவர் நடித்துள்ள லத்தி படத்தின் ரிலீஸும், மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங்கும் தடைபட்டுள்ளன.

இந்நிலையில் விஷால் இப்போது நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை அபிநயாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்