கார்த்தியின் படங்களிலேயே மிகப்பெரிய ஒப்பனிங்… விருமன் படைக்கும் சாதனை!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:23 IST)
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன்  திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12 தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக கலக்கி வருகிறது.

படம் வெளியாகி முதல் வார இறுதியில் மட்டும் வசூல் 30 கோடியை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என தெரிகிறது. கார்த்தி நடித்த படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த படமாக விருமன் அமைந்துள்ளது. இந்த வசூல் சீராக சென்றால் கைதி வசூலை முறியடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்