கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது.
இதனால் இன்னும் சில காட்சிகளைப் படமாக்க வேண்டும் என வெற்றிமாறன் விரும்புகிறாராம். அதனால் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோரிடம் மேலும் 30 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளதாகவும், அதனால் ஏற்கனவே இந்த படத்துக்காக அதிக தேதிகளை ஒதுக்கிய விஜய் சேதுபதி வெற்றிமாறன் மேல் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.