ஒரே படம் தான்: அதிதி ஷங்கருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்த ரசிகர்கள்!

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (19:40 IST)
ஒரே படம் தான்: அதிதி ஷங்கருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்த ரசிகர்கள்!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அவருக்கு ஒரே படத்திலேயே ரசிகர் மன்றம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கார்த்திக், அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது 
ஆனால் அதே நேரத்தில் அதிதி ஷங்கர் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
விருமன் படம் வெளியாகிய ஒரே நாளில் அதிதி ஷங்கருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இன்று சென்னை ரோகினி திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த அதிதி ஷங்கருக்கு அவருடைய ரசிகர் மன்றத்தின் சார்பில் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்