20 கெட்டப்பில் உயிரை பணய வைத்த விக்ரம் - கோப்ரா ரகசியத்தை சொன்ன இயக்குனர்!

Webdunia
புதன், 27 மே 2020 (09:55 IST)
விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.  ஆனால், கொரோனா ஊரடங்கினாள் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் வித்யாசமான 7 கெட்டப்புகள் அடங்கிய பர்ஸ்ட் போஸ்டர் அண்மையில் வெளியாகியது. ஆனால் இந்த படத்தில் 20 கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது .

மேலும் இப்படத்தில் விக்ரமின் அர்ப்பணிப்பு குறித்து பேசிய இயக்குனர், "  கோப்ரா படத்திற்காக நீருக்கடியில் மிக ஆபத்தான ஒரு காட்சி படமாக்கப்பட்டது. பாடி பில்ட் நடிகர்களே அந்த காட்சியில் நடிக்க முடியவில்லை. பின்னர் தானே அந்த காட்சியில் நடிப்பதாக கூறிய விக்ரம், வாயில் துணி அடைத்துக்கொண்டு கை , கால்களை கட்டிக்கொண்டு கயிறு கட்டி தண்ணீரில் தலைகீழாக தொங்கி நடித்தாராம். அதனால் விக்ரம் கண்களில் தண்ணீர் புகுந்து நரம்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம். பின்னர் மீண்டும் இடைவெளியின்றி நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்ததாக அஜய்ஞானமுத்து கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்