மீண்டும் தொடங்கிய விக்ரம்மின் வீர தீர சூரன் ஷூட்டிங்!

vinoth
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (14:47 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மதுரையில் நடந்து வந்த நிலையில் தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விக்ரம் வந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இப்போது தங்கலான் ரிலீஸ் ஆகி ப்ரமோஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்போது மீண்டும் வீர தீர சூரன் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள மதுரைக்கு சென்றுள்ளார். இன்றிலிருந்து 30 நாட்கள் தொடர்ந்து ஷூட்டிங் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்