கேரளாவில் இன்னமும் மாஸ் காட்டும் விக்ரம்… விநியோகஸ்தர் வெளியிட்ட தகவல்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (15:32 IST)
கேரளாவில் விக்ரம் திரைப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு அங்கு அபரிமிதமான வரவேற்புக் கிடைத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

தமிழைப் போலவே மலையாளம் மற்றும் தெலுங்கு டப்பிங் வெர்ஷன்களும் நல்ல வசூலைப் படைத்துள்ளன. இந்நிலையில் வெளியாகி 25 நாட்களைக் கடந்தும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதாக கேரளாவில் படத்தை வெளியிட்ட ஷிபு தமீன்ஸ் ட்வீட் செய்துள்ளார். மேலும் இதுவரையிலான வசூல் சாதனைகள் பலவற்றை தகர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்