விக்ரம்-அஜய்ஞானமுத்துவின் ‘கோப்ரா’ : அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்

வியாழன், 23 ஜூன் 2022 (18:09 IST)
விக்ரம்-அஜய்ஞானமுத்துவின் ‘கோப்ரா’ : அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்
பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏ.ஆர்ரகுமான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அட்டகாசமாக வந்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி பின்னணி இசை பணிகள் தற்போது அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் ‘கோப்ரா’ படக்குழுவினர் படத்தின் அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்,
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்