முந்தையத் தோல்விகளை வைத்து இயக்குனர்களை எடை போடுவதில்லை- விஜய் சேதுபதி கருத்து!

vinoth

சனி, 5 ஜூலை 2025 (10:06 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத். ஆனால் சமீபகாலமாக அவரின் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. விஜய் தேவரகொண்டாவை வைத்து அவர் இயக்கிய லைகர் படம் படுமோசமான தோல்வி பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார்.  இந்த படத்தில் தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.  இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியான போது விஜய் சேதுபதி ரசிகர்கள் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படம் பண்ணாதீர்கள் என சமூகவலைதளங்களில் அதிருப்தியை வெளியிட்டனர்.

இதுபற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள விஜய், “நான் முந்தைய படங்களின் தோல்வியை வைத்து இயக்குனர்களை எடை போடுவதில்லை. அவர் சொன்ன கதை பிடித்ததால் அந்த படத்தில் நடிக்கிறேன்.  இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் கதை. இதற்கு முன்னர் நான் இப்படி ஒரு படத்தில் நடித்ததில்லை.” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்