விஜய்யின் The GOAT படத்தில் இணையும் பிரபலத்தின் மகள்!

vinoth
சனி, 3 பிப்ரவரி 2024 (07:41 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் தங்கை வேடத்தில் நடிக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதையடுத்து இப்போது அந்த வேடத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த போதிலும் இதுவரை ஓடிடி, சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமை என எந்த பிஸ்னஸும் இதுவரை தொடங்கப்படவில்லையாம். ஏனென்றால் படத்துக்கு விஜய்யின் மார்க்கெட்டை விட மிக அதிக தொகையை படத் தயாரிப்பாளர்கள் நிர்ணயித்துள்ளார்களாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்