பல மொழிகளில் உருவாகும் விஜய்சேதுபதி படம் !

சனி, 31 ஜூலை 2021 (23:17 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில்  உருவாகிவரும்  புதிய படம்  பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியில் நடித்துவருகிறார்.

சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்தத மூலம் இவரது மார்க்கெட் உயர்ந்தது. தற்போது, நடிகர்  கமல்ஹாசனுடன் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், புரியாத புதிர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித்  ஜெயக்கொடி  இயக்கத்தில் ஒரு புதிய படத்தின் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளாம், கன்னடம்,இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது.

இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்