விக்ரம் படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரங்கள்? வெளியான ரகசியம்!

வியாழன், 29 ஜூலை 2021 (10:29 IST)
நடிகர் கமல் நடிக்க உள்ள விக்ரம் படத்தில் அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடிக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாகவும், பஹத் பாசில் விஞ்ஞானியாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் முதன்மை வில்லனாக நடிக்கிறராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்