இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லாதீர்கள்: மெர்சலுக்காக களமிறங்கிய விஜய்சேதுபதி

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (14:30 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக ராகுல்காந்தியே தனது டுவிட்டரில் குரல் கொடுக்கும் அளவிற்கு அந்த பிரச்சனை தேசிய பிரச்சனையாக உருவெடுத்துவிட்டது. இன்னும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டுமே 'மெர்சல்' குறித்து கருத்து கூற வேண்டியது பாக்கியாக உள்ளது.



 
 
இந்த நிலையில் விஜய்யின் 'மெர்சலுக்கு கோலிவுட் திரையுலகினர் போட்டி போட்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன்னர் நடிகர் விஜய்சேதுபதியுடன் தனது கருத்தை கொஞ்சம் ஆத்திரத்துடன் பதிவு செய்துள்ளார்.
 
'மெர்சல்' படத்துக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது: கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லாதீர்கள். மெர்சலுக்காக மக்கள் குரல் கொடுக்கும் நேரம் இது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்