விஜய் சேதுபதி பொன்ராம் படத்தின் ரிலீஸ் எப்போது? சன் பிக்சர்ஸின் முடிவு!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (17:05 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம்.

இவர் விஜய் சேதுபதி நடித்து வரும் 46வது திரைப்படத்தை கடந்த சில மாதங்களாக இயக்கி வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்,சி பழனி, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதாக
 படக்குழுவினர் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் படங்களை வரிசையாக ரிலீஸ் செய்து வரும் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தையும் ரிலீஸ் செய்யும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்