இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் பயன்படுத்த மிகப்பெரிய அளவில் ரூபாய் நோட்டுகள் தேவைப்படும் என்பதால் தற்போது சென்னையில் இருந்து இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஐதராபாத்துக்கு படப்பிடிப்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.