அஜித் 61 பட ஷூட்டிங் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்!

செவ்வாய், 10 மே 2022 (18:29 IST)
அஜித் 61 படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் அசுரன் பட நடிகை மஞ்சி வாரியர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டு வந்தது.

இப்போது ஐதராபாத்தில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் ஷூட்டிங் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திலேயே பெரும்பாலும் இரவுக் காட்சிகள் இடம்பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்