இந்த ஆண்டின் முதல் விஜய்சேதுபதியின் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (22:00 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக படங்களை ரிலீஸ் செய்து சாதனை படைத்த நடிகர் விஜய்சேதுபதி நடித்த படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் விஜய்சேதுபதி படம் என்ற பெருமையை பெற்றுள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சான்றிதழ் பெற்றதை அடுத்து பிப்ரவரி 2 என்ற ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

முதல்முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடிக்கும் இந்த படத்தில் காயத்ரி, நிஹாரிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆறுமுககுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படம் இவர் இசையமைத்துள்ள மூன்றாவது விஜய்சேதுபதி படம் ஆகும். 7C எண்டர்டெயின்மெண்ட் பிரவைட் லிமிடெட் மற்றும் அம்மா நாராயணன் புரடொக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்