மறுபடியும் போலீஸாக நடிக்கும் விஜய் சேதுபதி

வியாழன், 11 ஜனவரி 2018 (12:09 IST)
மணிரத்னம் இயக்கும் படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஜய் சேதுபதி என்ற தகவல் கிடைத்துள்ளது.
கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் ‘காற்று வெளியிடை’ படத்தை இயக்கிய மணிரத்னம், அடுத்ததாக மல்ட்டி ஸ்டாரர் படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். இன்னும் பெயர் வைக்காத இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, பஹத் பாசில்,  ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
 
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிகிறது.  படப்பிடிப்புக்கான பயிற்சிகள் முடிந்த நிலையில், முதலில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட இருக்கின்றன.
 
இந்தப் படத்தில், படம் முழுக்க வருபவராக போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இவர் சம்பந்தப்பட்டக் காட்சிகள்  மார்ச் மாதத்தில் படமாக்கப்பட இருக்கின்றன. ஏற்கெனவே ‘சேதுபதி’ படத்தில் போலீஸாக நடித்தவர் விஜய் சேதுபதி என்பது  குறிப்பிடத்தக்கது.
 
நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் மணிரத்னத்துடன் முதல்முறையாகக்  கை கோர்க்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்