விஜய் சேதுபதியின் ஜுங்கா ஃபஸ்ட் லுக் வெளியீடு

சனி, 6 ஜனவரி 2018 (12:23 IST)
ஜுங்கா படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கியவர்.
இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா சாஹல் நடிக்கிறார். காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 
 
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் அனைவரையும் கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி கையில் ஒரு துப்பாக்கியுடன் கோட்சூட் அணிந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் மீசையில் தோற்றமளிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்