‘96’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? இயக்குனர் பிரேம்குமார் தகவல்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (17:42 IST)
‘96’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? இயக்குனர் பிரேம்குமார் தகவல்!
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த 96 திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது
 
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாக்கப்பட்டது என்பதும் அந்த படமும் நன்றாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் பிரேம் குமார் முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்த திரைக்கதைக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 
 
தனது முன்னாள் காதலர் ராமை பார்ப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஜானு, சில நாட்கள் அவருடன் பழகி விட்டு அதன் பின்னர் மீண்டும் சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்வதுடன் முதல் பாகம் முடிவுக்கு வரும் 
 
இந்த நிலையில் த்ரிஷாவை தேடி ராம் கேரக்டர் சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும் அங்கு நடக்கும் காட்சிகள் தான் இரண்டாம் பாகம் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்