விஜய்சேதுபதி - கவுதம் மேனன் படத்தில் இணைந்த வரலட்சுமி!

வியாழன், 20 ஜனவரி 2022 (19:32 IST)
விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் நடிக்கும் படத்தில் வரலட்சுமி இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
புரியாத புதிர் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்திப் கிஷான் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் செய்தி மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் 
இந்த படத்தில் நாயகியாக திவ்யான்ஷா கெளசிக்  நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
வரலட்சுமி காட்சிகள் கூடிய படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்