பிப்ரவரி 11ல் ரிலீஸ் ஆகின்றதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்?

சனி, 29 ஜனவரி 2022 (18:53 IST)
விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைப் படங்களின் ரிலீஸ் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
அஜித்தின் வலிமை  உட்பட ஒரு சில பெரிய பட்ஜெட் படங்களும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி என்ற திரைப்படம் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
கடைசி விவசாயி திரைப்படம் முதலில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்