லோகேஷின் முதல் தயாரிப்பு ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்!

vinoth
வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:52 IST)
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலமாக உறியடி விஜய்குமாரின் 'ஃபைட் கிளப்' என்ற படத்தைக் கடந்த வாரம் வெளியிட்டார். இந்த படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்க, அவருடன் இணைந்து லோகேஷ் வெளியிட்டார். இந்த படத்தை லோகேஷின் உதவியாளர் இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி கதை எழுத விஜய்குமார் வசனத்தை எழுதியிருந்தார்.

இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்னரே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு மோசமான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் இந்த படம் பெரியளவில் ஏமாற்றவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 45 நாட்களுக்கு பிறகு ஜனவரி 27 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்