விஜய் கெட்டப்பில் பிரபல நடிகர்....வைரல் புகைப்படம்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (13:13 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் திரிஷாவின் கணவராக பார்த்திபன் என்ற கேரக்டரில் விஜய் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

இப்படத்தில்  நடிகர் விஜய்யின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இந்த கெட்டப்பில் ஏ.ஐ மூலம்  ஒரு ரசிகர் எடிட் செய்த  தனது புகைப்படத்தை நடிகர் பார்த்திபன் தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘’மிஸ்டர் விஜய் ரசிகர்கள் மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமாக இருக்கு’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்