அடுத்த 2 வருஷம் நான் பிஸி.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

திங்கள், 23 அக்டோபர் 2023 (12:27 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தை முடித்ததும் கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தலைவர் 171 படம் ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் என்றும் அடுத்து கைதி 2 திரைப்படம் ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் எனவும் கூறியுள்ள லோகேஷ், இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர்தான் அடுத்த படத்தில் கவனம் செலுத்துவேன் எனக் கூறியுள்ளார்.

அதையடுத்து விக்ரம் 2, ரோலக்ஸ், மற்றும் பிரபாஸ் படம் என இயக்கிவிட்டு 10 படங்களை முடித்துவிட்டு ஓய்வு பெற்றுவிடுவேன் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்