’மாஸ்டர்’ ரிலீசுக்கு இரண்டு தடங்கல்கள்: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (08:46 IST)
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன. இந்த படத்தின் அனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை ஆகி விட்ட நிலையில் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் செய்ய திரையரங்குகளில் தயாராக உள்ளன. மேலும் அனைத்து விநியோகஸ்தர்களும் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு தேவையான பணிகளை தற்போது செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் திட்டமிட்டபடி ’மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி திடீரென தற்போது எழுந்துள்ளது. ’மாஸ்டர்’ படத்திற்கு இரண்டு தடங்கல்கள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
 
 மார்ச் 27-ஆம் தேதி முதல் புதிய படங்களை திரையிட போவதில்லை என முடிவு செய்திருப்பதாக விநியோகஸ்தர் சங்கத்தலைவர் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த இந்த போராட்டம் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீடித்தால் ’மாஸ்டர்’ படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது 
 
மேலும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் 31ம் தேதி வரை நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என்று தியேட்டர் அதிபர் சங்கத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
இதேபோல் கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக தமிழகத்திலும் திரையரங்குகள் ஒரு சில நாட்கள் மூட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே ’மாஸ்டர்’ ரிலீஸ்க்கு இந்த சிக்கல்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த இரண்டு தடைகளையும் மீறி வெற்றிகரமாக ’மாஸ்டர்’ திரைப்படம் வெளிவரவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்