அடுத்த சிக்கலில் விஜய் - மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு!

செவ்வாய், 10 மார்ச் 2020 (15:58 IST)
பிகில் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தினர். ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அந்த படத்தின் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள், விஜய் வீடு உள்பட மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக கிடு பிடி சோதனை நடத்தினார்கள்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.  ஆனால், அந்த சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார் நடிகர் விஜய். ஆம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று மாலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   220 கோடிக்கு மாஸ்டர் படத்தின் விநியோகம் நடத்துள்ளதாகவும் அதில் லலித் குமாருக்கு 50 கோடி சென்றதாகவும் தகவல்கள் கூறுகிறது.

படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடுடின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் வருகிற 15 ம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த சமயம் பார்த்து இப்படி படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் பதற்றத்தில் உள்ளனர். ஆனால், விஜய்க்கு அவரது படம் வெளியாகும்போது இப்படி ஏதேனும் சர்ச்சை ஏற்படவில்லை என்றால் தான் வருத்தம். எனவே இதுவும் படத்தின் ப்ரோமோஷனாகவே அவரது ரசிகர்கள் பார்க்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்