பிறந்தநாளில் விஜய்யுடன் சமாதானம் ஆன எஸ் ஏ சந்திரசேகர்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (08:38 IST)
சமீபகாலமாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யுடன் சுமூகமான உறவில் இல்லை என்பதே அவரே வெளிப்படுத்தி வந்தார்.

நடிகர் விஜய்யின் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று அவரின் 47 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரின் சக கலைஞர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் உழைப்பும் முக்கியக் காரணம்.

ஆரம்ப காலங்களில் விஜய்யின் படங்கள் தொடர் தோல்வி அடைந்தாலும், அவரை வைத்து படங்களை தயாரித்தும் இயக்கியும் வந்தார். அதே போல விஜய்க்கு மேனேஜராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. விஜய் எஸ் ஏ சியிடம் சமீபகாலமாக பேசுவது கூட இல்லை என்று சொல்லப்பட்டது. இதை எஸ் ஏ சியே அவர் அளித்த நேர்காணல்களில் ஒத்துக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் சமாதானம் அடைந்துள்ளதாகவும், நீண்ட நேரம் பேசியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்