குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

vinoth

சனி, 7 ஜூன் 2025 (16:40 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து ஜூன் 20 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் நாகார்ஜுனா.  அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்