தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான திரில்லர் படமான 'லெவன்' மே 16 ஆம் தேதி ரிலீஸானது. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய கவனிக்கப்பட்ட படங்களை தயாரித்த ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.
படத்தில் நவீன் சந்திரா, அபிராமி, ரேயா ஹரி, சஷாங், திலீபன் மற்றும் ரித்திகா ஆகியோர் நடித்திருந்தனர். டி இமான் இசையமைத்திருந்தார்.