நந்தலாலா படத்தில் விஜய் சேதுபதியை நிராகரித்த மிஷ்கின்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (08:32 IST)
இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர்களில் ஒருவர்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலால ஆகிய படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. ஆனால் அதன் பின்னர் அவர் எடுத்த முகமூடி உள்ளிட்ட சில படங்கள் சரியாக போகவில்லை. இந்நிலையில் இப்போது தனது ஹிட் படமான பிசாசு படத்தின் பார்ட் 2வை எடுத்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மிஷ்கின் உறவு பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கின் 2010 ஆம் ஆண்டு நந்தலாலா படத்தை இயக்கியபோது அதில் ஒரு பாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டாராம். ஆனால் அவரின் நடிப்பு பிடிக்காததால் மிஷ்கின் அவரை நீக்கிவிட்டாராம். 10 ஆண்டு கால இடைவெளியில் விஜய் சேதுபதி மிகப்பெரிய கதாநாயகனாக உருவாகிவிட, அவரை தன் படத்தில் நடிக்க வைத்துள்ளார் மிஷ்கின்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்