திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் பேக்கெட் இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.