புஷ்பா தயாரிப்பாளர்களோடு இணையும் விஜய்… அட்லி இயக்கத்தில் விஜய் 68

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:25 IST)
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, அடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ஆனார். அதையடுத்து இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தை முடித்ததும் அவர் மீண்டும் விஜய்யை இயக்க உள்ளாராம். இந்த படத்தை புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் விஜய் லோகேஷ் இயக்கும் விஜய் 67 படத்தில் நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்