கே ஜி எஃப் யாஷுடன் இணையும் லோகேஷ்… லேட்டஸ்ட் தகவல்!

திங்கள், 17 அக்டோபர் 2022 (14:56 IST)
லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய் நடிக்கும் படத்தை இயக்கத் தயாராகி வருகிறார்.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தை முடித்து விட்டு லோகேஷ் கைதி 2 மற்றும் கமலுடன் மீண்டும் ஒரு படம் என இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் இப்போது தளபதி 67 படத்தை இயக்கி முடித்ததும் அவர் கே ஜி எஃப் புகழ் யாஷுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்