சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தில் பகத் பாசில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திலும் அவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசில், தமிழிலும் சில படங்கள் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் அவர் அசத்தலாக நடித்ததை அடுத்து, தொடர்ந்து கமல்ஹாசன் உடன் விக்ரம், ரஜினியுடன் வேட்டையன் உள்பட பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா அல்லது முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா என்பது குறித்து தெரியவில்லை. என்றாலும், மீண்டும் வேட்டையன் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.