தீபாவளி ரேஸில் முந்தும் சர்தார்… பிரின்ஸ் படத்துக்கு குறைவான தியேட்டர்கள்?

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:19 IST)
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்களில் சர்தார் படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. அதே போல சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இப்போது இந்த இரு படங்களுக்கும் முன்பதிவு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரின்ஸ் படத்துக்கு அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சிகளும், சர்தார் படத்துக்கு காலை 8 மணிக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் சர்தார் படத்துக்கு பிரின்ஸ் படத்தைவிட அதிக திரைகளில் வெளியாகிறதாம். அதற்குக் காரணம் சர்தார் படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட்டு வருவதால் அந்த நிறுவனம் வெளியிடும் படமான சர்தார் படத்தையே அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் செய்கிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்