கடைசி நேரத்தில் விலகிய விஜய் ஆண்டனியின் தமிழரசன்… எப்போ ரிலீஸ்?

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (07:27 IST)
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுமை பெற்றது. இதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பின்னர் அந்த படத்துக்கு பதிலாக விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு விஜய் ஆண்டனி சம்மதிக்கவில்லை என சொல்லப்பட்டது.

தமிழரசன் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு முன்பே முடிந்த இந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம், கடைசி நேரத்தில் விலகியுள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்