நயன்தாராவின் கொலையுதிர்க்காலம்: விக்னேஷ் சிவனின் திடீர் பல்டி

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (08:55 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராதாரவி, திமுகவில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 
 
இந்த விஷயத்தில் நயன்தாராவே அதிக டென்ஷன் ஆகவில்லை. ஆனால் அவருடைய காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், 'கொலையுதிர்க்காலம்' படக்குழுவினர்களை தனது டுவிட்டரில் காய்ச்சி எடுத்துவிட்டார். இன்னும் படப்பிடிப்பே முடியவில்லை அதற்குள் என்ன புரமோஷன் விழா என்று அவர் கூறியது இந்த படத்தின் வியாபாரத்தையும் பெரிய அளவில் பாதித்ததாகவும், அதனால் விக்னேஷ் சிவன் மீது தயாரிப்பாளர் வழக்கு தொடரவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் நயன்தாரா தலையிட்டு தயாரிப்பாளரை சமாததாம் செய்ததால் இந்த விஷயம் அடங்கியதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படக்குழுவினர்களுக்கு விக்னேஷ் சிவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த படத்தை தான் பார்த்ததாகவும், நயன்தாரா உள்பட படத்தில் நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருப்பதாகவும், தான் முன்பு சொன்ன சில சர்ச்சை கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும், இந்த படம் வெற்றியடைய தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்