சின்னத்திரைக்கு செல்லும் விக்னேஷ் சிவன்… பிரபல தொலைக்காட்சியில் புது நிகழ்ச்சி!

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (08:57 IST)
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க,விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்துக்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைக்கதை லைகா மற்றும் அஜித் தரப்புக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டு, இப்போது மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதையடுத்து தன்னுடைய அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இன்னும் தொடங்கவில்லை. அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அந்த படத்தின் திரைக்கதை பணிகள் இப்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் பிரபலங்களை அழைத்து நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி ஒன்றை விக்னேஷ் சிவன் தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் இதுபோல பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்